ஞாயிற்றுக்கிழமை அதிகாலைச் சதுக்கம்

38உதிரிகளின், ஏதிலிகளின் மரண வரலாறும் தேச உருவாக்கத்தின் விளைவான தனிமனித அன்னியமாதலும் யமுனா ராஜேந்திரனின் கவிதைகளில் திடுக்கிடும்படி பதிவாகின்றன. தேச நினைவற்றவர்களின் அடித்தள பண்பாட்டு நடத்தைக்கு ஒரு தற்கொலை வரைபடத்தையும் இக்கவிதைகள் கோருகின்றன. தன்னிலை மனதின் சிதைவையும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆண்மொழியின் வடிவத்தையும் கலைத்துச் செல்லும் இவை, நிறுவனமாகாத பாலியல் எச்சங்களின் வழியே மூலதனம் அவிழ்த்துவிட்டிருக்கும் பின்நவீனத்துவக் கேளிக்கையையும் அதன் நகல் கலைகளையும் வர்க்க உறுதிப்பாட்டுடன் கடந்து செல்லவும் முயல்கின்றன. ஓருலக முதலீட்டிய பொருண்மைக்கு எதிரான எதிர்க்கலகக் கலையாக, தமிழில் ஈழப் பார்வையுடன் கூடிய புதிய வரவாக இக்கவிதை நூல் நமக்குக் கிடைக்கிறது. கவிஞர் தன் பால்யத்தின் இழப்பிற்கு வைக்கும் சமகால அரசியல் அறம் இத்தொகுப்பு : யவனிகா ஸ்ரீராம்