இந்தியப் பிரிவினை சினிமா

4இதுவரைத்திய இந்து முஸ்லீம் படங்களையும் சரி, இந்தப் பிரச்சினகளை முன் வைத்த வியாபார ரீதியிலான நோக்கம் கொண்டு தயாரிக்கப்பட்ட பாப்ரி மஜீத் இடிப்புக்குப் பின்னான ஜனரஞ்சகப் படங்களையும் சரி, நாம் புரிந்து கொள்வதற்கும் அவை குறித்த விமர்சனப் பார்வைகளை உருவாக்கிக் கொள்வதற்கும், இனி வரும் காலங்களில் சமூகப் பொறுப்புள்ள கலைஞர்களுடன் உரையாடுவதற்கும் சரி, நமக்குச் சில வரலாற்றுப் புரிதல்களும் அரசியல் அடிப்படைகளும் சினிமா ஊடக காட்சிருபச் சித்தரிப்பின் கருத்தியல் பற்றிய அவதானமும்தான் நிச்சயமாகத் தேவையாகிறது