ஈழத்து அரசியல் நாவல்

25இந்நூல் சமகாலப் பிரக்ஞையுடன் சரித்திரப் பகைப்புலத்தில் நெசவான சில ஈழத்து நாவல்களை, கட்டமைப்பு, மொழிநடை, விவரணமுறை ஆகிய சகல தளங்களிலும் விமர்சனப் பார்வையுடன் ஆய்வு செய்துள்ளது. மேஜிகல் ரியலிசப் படைப்பாளிகள் மக்களை நேசிப்பர்கள் அல்ல என்றும், அவர்கள் தம்மை நேசிப்பவர்கள் என்றும், அவர்கள் தமது பிரதிகளை நேசிப்பவர்கள் என்றும், அவர்கள் சம்பவங்களை எழுதுபவர்கள் அல்ல, சர்ரியலை எழுதுபவர்கள் என்றும் உரத்துச் சொல்லும் படைப்பாளிகளின் குரல்களைப் பதிவு செய்துள்ளது இந்நூல்.