வன்முறை திரைப்படம் பாலுறவு

26வன்முறை திரைப்படம் பாலுறவு குறித்த ஆழ்ந்த விவாதங்களுக்கான ஒரு முன்வரைவாகவே இக்குறுநூல் உருவாகியிருக்கிறது. உலக சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில் நிகழ்ந்த வன்முறை மற்றும் பாலுறவு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான விவாதங்களை நானறிந்த வரையில் முக்கியமான கூறுகளோடு இக்குறுநூலில் தொகுத்திருக்கிறேன்.
பிரச்சினையின் அடிப்படையான மானுட அம்சங்களையும், அதனைத் திரையில் சித்தரிப்பதிலுள்ள அரசியல் தாண்டிய அழகியல் அறவியல் அம்சங்களையும் தமிழ் சினிமாப் பின்னணியில் அவதானிக்க முயன்றிருக்கிறேன். தேவதைகள் கால் வைக்கத் தயங்கும் வெளியில்  பிரவேசித்திருக்கறேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.