ஆயுதப்போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது

24தமிழகத்தின் முக்கியமான மார்க்சிய சிந்தனையாளரான எஸ்.என்.நாகராஜன் அவர்களுடன் நானும் எனது நண்பர்களும் நெறிப்படுத்தி நடத்திய உரையாடலின் முழு வடிவம் இங்கு நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. தேசியம், சூழலியல், பெண்ணியம், பெரியாரியம், அரபு எழுச்சி, நவகாலனிய எதிர்ப்பு போன்றவை விமோசன அரசியலின் இணைந்த பகுதிகளாக ஆகியிருக்கும் இன்றைய சூழலில் ஆயுதப் போராட்டத்தின் சாத்தியம், சாத்தியமின்மை பற்றிப் பேசும் எஸ்.என்.நாகராசனுடனான இந்த உரையாடல் நம் காலத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது.