இலங்கையின் கொலைக்களம்

இலங்கையின்-wrappeசேனல் நான்கு தொலைக்காட்சியின் முழுமையான நிதி உதவியில்தான் இத்திரைப்படங்கள் உருவாகியது. நாங்கள் சுதந்திர ஊடகமாகச் செயற்படுகின்றோம். எமது முன்னைய விசாரணைகளில் அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளின் அதிகளவிலான போர்க்குற்றத் தவறுகள் சுட்டப்பட்டுள்ளன. இலங்கையின் போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் சுட்டப்பட்டுள்ளன.இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பது போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சாத்தியமற்றது. சிறிலங்கா அரச படைகள் யுத்த மீறல்கள் மேற்கொண்டதை இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அறிந்தேயிருந்தன.விடுதலைப்புலிகளோ, இலங்கை அரசோ, அல்லது அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, யாராயினும், போர்குற்றம் புரிந்தால் அதை வெளிக்கொணர்வது ஊடகவியலாளரின் கடமை. ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் எனது கடமையை நான் சரிவரச் செய்துள்ளேன். இப்போது இலங்கை தொடர்பிலும் அதையே செய்துள்ளேன். இதற்குமேல் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் செய்யவேண்டியது எதுவோ, அதனை அவர்கள் செய்யட்டும் என்கிறார் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்பட்ட இயக்குனர் காலும் மக்ரே.