ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு

11ஜூமானா ஹத்தாத் லெபனானின் உள்நாட்டுப் போரின் வன்முறை தோற்றுவித்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1970 ஆம் ஆண்டு, அரபு நாடுகளிலொன்றான லெபனானின் தலைநகர் பெய்ரூத்தில் பிறந்த ஜூமானா ஹத்தாத் பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ், அரபு, ஆங்கிலம் உள்பட ஏழு மொழிகளில் எழுதி வருபவர். ஸரமாகோ, அம்பர்தோ எக்கோ மற்றும் எல்பிரீட் ஜெலினிக் போன்ற ஐரோப்பிய எழுத்தாளர்களுடன் ஜூமானா நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பொன்றும், தற்கொலை செய்துகொண்டு மரணமுற்ற இருபதாம் நூற்றாண்டின் 150 கவிஞர்களது படைப்புக்களின் தொகுதியொன்றும், ஜூமானாவின் முக்கியமான இரு அரபு மொழி நூல்கள்.