கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்

17பிறிதொன்றினால் இயக்கப்படும் மனிதனாகவோ, மொழிக்கு யதேச்சையாக வடிவம் தரும் உருவக்காரனாகவோ படைப்பாளியைப் பார்க்கும் பின்நவீனத்துவப் பார்வை ‘தமது கருத்துக்களுக்காகக் கொல்லப்பட்ட அல்லது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட’ ரோக் டால்டன், சேகுவேரா மற்றும் ஆரியல் டோப்மேன் போன்ற படைப்பாளிகளிடம் செல்லுபடியாகாது.

மேலாதிக்கம் கொண்டிருக்கும் உரையாடல்களுக்கு எதிரான, எதிர்ப்புணர்வைக் கட்டமைக்கும் பாத்திரம் வகித்தவர்கள் எனும் அளவில், இவர்களின் படைப்பு பற்றிய விமர்சனம் என்பது, உடலளவில் இவர்களும் இவர்களது படைப்புகளும் இயங்க நேர்ந்த சூழலின் வரலாற்று, அரசியல், கலாச்சாரப் பிரச்சினைகளின் கோட்பாடு சம்பந்தமானதாகும். இவர்களின் வாழ்வும், படைப்பும், மரணமும் அத்தகைய கோட்பாடுகளை மறுவிளக்கம் செய்த அரசியலின் விளைவுகளாகும். இக்கவிதைகள் கடந்தகால முரண்பாடுகள் குறித்த விமர்;சன ரீதியிலான மறு சிந்தனையினூடாக, எதிர்காலத்துக்கான புதிய அறங்களின் சாத்தியம் பற்றிய எழுத்துக்கள். நம் காலத்தின் கவிஞனின் மரணமும், அந்த மரணத்தின்; மூலம் நிரந்தரமடைந்த கவிதைக்குமான சாட்சியங்கள் இந்த எழுத்துக்கள்.