நான் பின் நவீனத்துவ நாடோடி இல்லை

7பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சாரத் தர்க்கமாக பின்நவீனத்துவத்தைக் காணும் அமெரிக்க மார்க்சியரான பிரெடரிக் ஜேம்ஸன், அழகியல் குறித்த கருத்தியல் சர்ச்சைகளை பின்நவீனத்துத்திற்கு எதிரான விமர்சனமாகக் காணும்  அயர்லாந்துக் கலாச்சார மார்க்சியரான  டெரி ஈகிள்டன், சோஷலிச ஜனநாயகமும் மேலாண்மையும் குறித்து பின் சோவியத் பின்னணியில் பேசும் அர்ஜன்டீன இடதுசாரியான ஏர்னஸ்ட் லக்லாவ்,  அடையாள அரசியல் மற்றும் தேசியம் குறித்துத் தீவிர விமரசனங்கள் கொண்ட இந்திய மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டாளர் அய்ஜஸ் அஹமது, வித்தியாச அரசியலின் நெருக்கடி குறித்துப் பேசும் வெகுஜனக் கலை விமர்சகரான ஆப்ரிக்கக் கல்வியாளர் ஸ்டூடுவர்ட் ஹால், பின்நவீனத்துவத்தின் கலாச்சாரச் சார்புவாதம் மற்றும் அதனது போலி விஞ்ஞானக் கோருதல்களை விமர்சிக்கும் பௌதிகவியலாளரும் அமெரிக்க மார்க்சியருமான அலன் ஸாக்கல், பிரெஞ்சுச் சமூகவியலாளரும் இடதுசாரிக் கோட்பாட்டாளருமான காலஞ்சென்ற பியர்ரோ போர்தியோ போன்றோரது விரிவான நேர்முகங்களைக் கொண்டதாக இந்நூல் விரிகிறது.பின்நவீனத்துவத்தை அதனது வரலாற்றுப் பின் புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் இந்த நூல், மாரக்சியத்திற்கும் பின்நவீனத்துவத்திற்கும், தேசியத்திற்கும் தலித்தியத்திற்கும் இடையில் கடந்த இருபது ஆண்டுகளாக நடந்து வந்திருக்கும் கோட்பாட்டுச் சர்ச்சைகளைத் தொகுத்துத் தருகிறது. மாரக்சியமே மனித விடுதலையின வற்றாத ஜீவ ஊற்று என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் நூலசிரியரான யமுனா ராஜேந்திரன்.