சொல்லப்படாத உலகம்

22மாற்றுச் சினிமாவைத் தேடிச்செல்கையில் அதனது உடனடிப் பூர்வீக ஆதாரங்களை தமிழ்க் குறும்படங்களிலும் விவரணப்படங்களிலும்தான் என்னால் கண்டு கொள்ள முடிந்தது.  தமிழ் மாற்றுச் சினிமாவுக்கான அனைத்து வேர்களும்; கூறுகளும் இந்தக் குறும்படங்களிலும் விவரணப்படங்களிலும்தான் சிதறிக் கிடக்கின்றன. விவரணப்படங்கள் சொல்லப்படாத உலகங்களின் செய்திகளைச் சொல்கின்றன. குறும்படங்கள் தமிழ் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்வைச் சொல்கின்றன. இவ்வகையில் மாற்றுச் சினிமா என்பது அதனது வேர்தளத்தில் தோன்றியிருக்கும் இடமாக தமிழ்க் குறும்படங்கள், விவரணப்படங்கள் இயங்கும் தளத்தைச் சொல்லலாம்.